டிசம்பரில் அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

tamilnaadi 15

இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் சுற்றுலாப்பயணிகளின் வருகை 2 இலட்சத்தைத் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த 4 வருடங்களில், ஒரு மாதத்தில் அதிகளவான சுற்றுலாப்பயணிகளின் வருகை இந்த டிசம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 1.5 மில்லியன் சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு வரவழைக்கும் இலக்கு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் குறித்த இலக்கை எட்ட முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version