இலங்கையில் இலவச சுற்றுலா விசா நடைமுறை

24 66383a771095d

இலங்கையில் இலவச சுற்றுலா விசா நடைமுறை

நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் இலவச சுற்றுலா விசாக்களை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக இலங்கை அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை நிறுவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபரின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சந்திமா விக்கிரமசிங்க(Chandima Wickramasinghe) தலைமையில், இந்தக் குழுவில் சுற்றுலா, குடிவரவு, பாதுகாப்பு மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிபுணர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா மற்றும் தொடர்புடைய தொழில்களில் அவற்றின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு இலவச சுற்றுலா விசா திட்டங்களின் சர்வதேச மாதிரிகளை ஆய்வு செய்வது குழுவின் ஆணையில் அடங்கும்.

அத்தோடு உறுப்பினர்கள் மற்ற நாடுகளில் வெற்றிகரமான நடைமுறைகளை பகுப்பாய்வு செய்வார்கள் மற்றும் இலங்கைக்கான அவற்றின் சாத்தியமான நன்மைகள் மற்றும் குறைபாடுகளை மதிப்பீடு செய்வார்களென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சுற்றுலாத்துறை சங்கங்கள் போன்ற முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய இந்த குழு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickramasinghe) விரிவான பரிந்துரைகளை ஒரு மாதத்திற்குள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version