ஒரு மில்லியனை நெருங்கும் சுற்றுலா பயணிகளின் வருகை

27 8

 

2025ஆம் ஆண்டில் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்கி வருவதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது.

ஆணையத்தின் அண்மைய புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 956,639 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மே மாதத்தின் முதல் 13 நாட்களில் மட்டும் 59,755 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்தக் காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளது.

அதன்படி, அங்கிருந்து 18,812 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

அது தவிர, ஜெர்மனியிலிருந்து 4,447 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,256 பேரும், சீனாவிலிருந்து 3,930 பேரும் வந்துள்ளனர்.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​2025 ஆம் ஆண்டின் வரும் மாதங்களில் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version