24 6631d2415caf2
இலங்கைசெய்திகள்

புதிய விசா முறையில் சிக்கல்…சுற்றுலாப்பயணிகளின் வருகையில் தாக்கம்!

Share

புதிய விசா முறையில் சிக்கல்…சுற்றுலாப்பயணிகளின் வருகையில் தாக்கம்!

புதிய விசா முறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்களின் காரணமாக நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறைவடையும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார், இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்த புதிய விசா நடைமுறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்கள், வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையினை 230,000 ஆகவும், வருடத்திற்கான சுற்றுலா வருமானத்தில் 425 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பினையும் ஏற்படுத்தும் சாத்தியம் அதிகரித்துள்ளது.

எனவே, புதிய விசா முறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதிக்குள் நிவர்த்தி செய்யப்படும்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் இயக்கப்படும் இலத்திரனியல் பயண அங்கீகார முறையிலிருந்து IVS-GBS மற்றும் VFS Global ஆல் இயக்கப்படும் தளத்திற்கு இலங்கை மாற்றப்பட்டது.

இந்த புதிய தளத்தின் கீழ், 75 அமெரிக்க டொலர் செலவில் பல நுழைவு விசா அறிமுகப்படுத்தப்பட்டது, இவை ஒவ்வொன்றும் அதிகபட்சமாக 60 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் ETA ஆல் முன்னர் வழங்கப்பட்ட ஒற்றை நுழைவு விசா விருப்பங்கள் சேர்க்கப்படவில்லை, அதுமாத்திரமன்றி இந்தப் புதிய விசா முறைமையை இயக்குபவரிற்கு சேவைக் கட்டணமாக18.5 அமெரிக்க டொலர் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த 30 நாள் ஒற்றை நுழைவு விசா சேர்க்கப்படாதது பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது மாத்திரமல்லாமல் இது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.

அதன்படி முதல் 15 நாட்களில், ஒரு நாளைக்கு சராசரியாக 5500 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நிலையில், ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி காலப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் வருகை, சராசரியை விட 3200 ஆகக் குறைந்துள்ளது, எனவே இது எதிர்பார்த்ததை விட 25,000 சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கையில் குறைவை ஏற்படுத்தும்.

எனவே இந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர புதிய விசா முறைமையிலுள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும், அதே சமயம் சேவைக்கட்டணத்தில் மாற்றம் எதுவும் ஏற்படாது.

புதிய விசா முறைமையை இயக்குபவரிற்கு சேவைக் கட்டணமாக 18.5 அமெரிக்க டொலர்களுக்கு மேல் கட்டணம் அறவிடும் நாடுகள் உள்ளன, இருந்தபோதிலும் அவர்கள் இலங்கைக்கு குறைந்த பட்ச தொகையினை மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறார்கள்,எனவே இதனை மாற்ற இயலாது.” என்றார்.

Share
தொடர்புடையது
1532860700 Two police officers arrested over assaulting two youths B
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பதற்றம்: இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதோடு,...

22 62a8366eaa932
செய்திகள்இலங்கை

பெண் அரச ஊழியர்களுக்கு Work From Home வசதி? – அமைச்சரவை மட்டத்தில் தீவிர ஆலோசனை!

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார...

download 1 1
செய்திகள்விளையாட்டு

LA 2028 ஒலிம்பிக்: வெறும் 28 டொலர்களுக்கு நுழைவுச்சீட்டு – முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு...