24 66946b817c83a
இலங்கைசெய்திகள்

அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள அவசர கோரிக்கை

Share

அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள அவசர கோரிக்கை

பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதற்கு கடுமையான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்த வேண்டும் என அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துருகிரி நகரில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த என்பவர் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பாதாள உலகத்தை இவ்வாறு ஆட அனுமதித்தால் நாட்டில் அமைதியை எவ்வாறு பேணுவது என அந்தந்த அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கடுமையாக கோரிக்கையொன்றினை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்துமாறு அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தேர்தலின் போது பாதகமான சூழ்நிலை ஏற்பட்டாலும் மக்களை ஒடுக்கும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மக்களை ஒடுக்கும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...