இலங்கை சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள வெற்றிடம்

24 6652b7f549037

இலங்கை சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள வெற்றிடம்

இலங்கையின் அரச சுகாதார அமைப்புக்குள் சுமார் 2,000 மருந்தாளுநர்களுக்கான (pharmacists) வெற்றிடங்கள் காணப்பபடுவதாக அரச மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் துசார ரணாதேவ (Dhusara Ranadeva) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“பொதுவாக நாட்டின் மருத்துவ அமைப்பு 4000 மருந்தாளுநர்களை கொண்டிருக்க வேண்டும்.

எனினும், தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் காரணமாக சுகாதாரத்துறையில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த நெருக்கடியை சரிசெய்ய போதுமான நடவடிக்கைகளை எடுக்க சுகாதார அமைச்சகமும், அதிகாரிகளும் தவறிவிட்டனர்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version