17 10
இலங்கைசெய்திகள்

இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்

Share

இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்

நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் செயலிழந்த மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் இன்று மீள செயல்படத் தொடங்கியுள்ளதுடன் பொறியாளர்களின் கண்காணிப்பில் இயந்திரங்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குறித்த இயந்திரங்களின் செயற்பாட்டின் அடிப்படையில் இன்றைய தினம் (14) மின்வெட்டு தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாணந்துரை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட அவசர நிலை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் படிப்படியாக மின் விநியோகம் வழமைக்கு திரும்பியிருந்தது.

இந்த நிலையிலேயே நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் 3 மின்னுற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...