rtjy 119 scaled
இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலையால் 7 பேர் உயிரிழப்பு!

Share

சீரற்ற காலநிலையால் 7 பேர் உயிரிழப்பு!

நாட்டின் நிலவுகின்ற கடும் மழையுடனான காலநிலை நிலை காரணமாக இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று (08.10.2023) காலை மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

13 மாவட்டங்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் நிலவுகின்ற கடும் மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று (08.10.2023) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது

இதன்படி, கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யும்.

மேலும், கிங் கங்கையின் நீர் மட்டம் 5.3 மீற்றராக உயர்ந்துள்ளதால் பத்தேகம பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு மாவட்டச் செயலாளர் சாந்த வீரசிங்க அறிவித்துள்ளார்.

காலி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...