16 13
இலங்கைசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Share

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (14) மாலை 6:00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை பிரதேச செயலகத்திற்கு 2 கட்டங்களின் கீழ் அவதானமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை மற்றும் ஹாலியால, கண்டி மாவட்டத்தில் மெத தும்பற ஆகிய பகுதிகளின் 1 ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனடிப்படையில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. அளவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது..

மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...

11 5
செய்திகள்உலகம்

ஈரானின் அடுத்த உச்சத் தலைவர் யார்? டெல்லியில் மூத்த மதத்தலைவர் விளக்கம்!

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கடந்த வாரம் அமெரிக்க – இஸ்ரேலிய வான்வழித்...