6 7
இலங்கைசெய்திகள்

கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share

கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (09.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மேலும், மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என தெதரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அத் தொகுதி டிசம்பர் 11ஆம் திகதியளவில் இலங்கை – தமிழ்நாடு கரைகளுக்கு அப்பாற்பட்ட தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டிசம்பர் 10ஆம் திகதியிலிருந்து மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் இணைந்ததாக நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமையும் படிப்படியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
Vijayakanth Viyaskanth SRH IPL 2024 1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைவு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில், இளம் சுழற்பந்து...

67e090cde912a.image
உலகம்செய்திகள்

கனடாவின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடி: இஸ்ரேல் ஆதரவுக் குழுவின் தஃப்சிக் அமைப்பு தடை கோரி நீதிமன்றம் நாடியது!

கனடாவின் பல நகரங்களின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...