24 66076b876579e
இலங்கைசெய்திகள்

மரக்கறி மற்றும் மீன்களின் விலைகளில் மாற்றம்

Share

மரக்கறி மற்றும் மீன்களின் விலைகளில் மாற்றம்

பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலையில் நேற்று (29) கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எச்.டி.என். சமரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், மரக்கறிகளின் விலை குறைந்துள்ளமையினால் வாடிக்கையாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் சில வியாபாரிகள் தூக்கி எறிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, நேற்று ஒரு கிலோ முள்ளங்கி 40 ரூபாய்க்கும், கருவேப்பிலை கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.

மேலும், வெங்காய இலை 80 ரூபாய், ஒரு கிலோ கத்தரிக்காய் 100 ரூபாய், மக்காச்சோளம் கிலோ 100 ரூபாய், கத்தரிக்காய் 100 ரூபாய், தக்காளி கிலோ 120, பூசணி 120 ரூபாய், போஞ்சி கிலோ 100, வெண்டைக்காய் கிலோ 140, கரட் 150, முட்டைகோஸ் கிலோ 150, பச்சை மிளகாய் கிலோ 150, ஒரு கிலோ மீன் மிளகாய் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ வெள்ளரி 20 ரூபாய்க்கும், ஒரு கிலோ இஞ்சி 1300 ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (29) பேலியகெட மீன்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மீன் சந்தை வர்த்தக நிலையத்தின் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெயந்த குரே தெரிவித்துள்ளார்.

பண்டிகைக்காலம் நெருங்கும் போது மீன்களின் விலை அதிகரிப்பது வழக்கம் என்றும் சாலயா மொத்த விற்பனை 550 ரூபாவாகவும், லின்னா 750 ரூபாவாகவும், ஹுருல்லா 750 ரூபாவாகவும், பலாயா 650 ரூபாவாகவும், கெலவல்லா 900 ரூபாவாகவும், தலபட் 1400 ரூபாவாகவும், பாராவோ 1400 ரூபாவாகவும், ஒரு கிலோ தோரா 1200 ரூபாவாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கிலோ கும்பலாவ 800 ரூபாவுக்கும், இறால் கிலோ 2000 ரூபாவுக்கும், கணவாய் கிலோ 1200 ரூபாவுக்கும், விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...