கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் இதுவரை 16 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்,78ற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ள நிலையில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.