தங்க விலை அதிகரிப்பு : முக்கிய தகவல்

17 15

தங்க விலை அதிகரிப்பு : முக்கிய தகவல்

தங்கத்தின் விலையானது உலக சந்தையில் (World Market) நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இலங்கையில் நேற்றைய தினம் (30) வீழ்ச்சியடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்று (31.07.2024) மீண்டும் அதிகரித்துள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் (Ounce) தங்கத்தின் விலையானது 729,360 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,730 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 205,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,590 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 188,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,520 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 180,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 197,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 182,200 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version