இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி(CBSL) வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று (03) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய மாற்றம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295.85ஆகவும் விற்பனைப் பெறுமதி 304.27 ரூபாவாக ஆகவும் பதிவாகியுள்ளது.
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.38 ஆகவும் விற்பனைப் பெறுமதி 224.96 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 347.53 ஆகவும் விற்பனைப் பெறுமதி 360.45ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 402.02 ஆகவும் விற்பனைப் பெறுமதி 416.22 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192.17 ஆகவும் விற்பனைப் பெறுமதி 202.08 ஆகவும் பதிவாகியுள்ளது.