வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில் உள்ள ஊவா குடா ஓயா பொலிஸ் பிரிவின் தெல்லுல்ல பகுதியில் சற்றுமுன்னர் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
மஹியங்கனை-எல்பிட்டிய இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பின்புறத்தில் லொறி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.