Murder Recovered Recovered 5
இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய இலத்திரனியல் விசா ஒப்பந்தத்தில் சிக்கபோகும் ரணில் அரசின் முக்கிய புள்ளி

Share

சர்ச்சைக்குரிய இலத்திரனியல் -விசா முறைக்கேட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் சிக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலத்திரனியல் -விசா வழங்குவதை நிறுத்திவிட்டு, பழைய முறையைப் பயன்படுத்தி விசாக்களை மீண்டும் வழங்குவதற்கான நீதிமன்ற உத்தரவை மீறியமை தொடர்பில், நீதிமன்ற அவமதிப்பு செய்த வழக்கில் ஹர்ஷ இலுக்பிட்டிய தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு திணைக்களம் பொதுபாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகின்ற நிலையில் அப்போதைய பொது பாதுகாப்பு அமைச்சரையும், அப்போதைய செயலாளரையும் குறிப்பிட்டு சில ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

இலத்திரனியல் – விசா விநியோக சர்ச்சையில் அப்போதைய பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸும் சிக்குவாரா என கேள்வியெழுப்பியுள்ளன.

முன்னதாக 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலத்திரனியல் விசா நடைமுறையில் இருந்த சிக்கல்கள் தொடர்பில் அப்போதைய பொது பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் டிரான் அலஸ் பல கருத்துக்களை ஊடகங்களுக்கு வழங்கியிருந்தார்.

இதன் பின்னணியிலேயே டிரானுக்கும் இலத்திரனியல் – விசா சர்ச்சைக்கும் இடையில் தொடர்புகள் உள்ளனவா என கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இதன்படி பிரதிவாதியான குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தண்டனை விதிக்கும் உத்தரவு இந்த மாதம் 24 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில் குறித்த கேள்விகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...