rtjy 249 scaled
இலங்கைசெய்திகள்

நினைவேந்தல் நிகழ்வுகளை தடுக்க முடியாது!

Share

நினைவேந்தல் நிகழ்வுகளை தடுக்க முடியாது!

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த மூவின மக்களுக்கும் உரிமை உண்டு. அதைத் தடுத்து நிறுத்துவது அடிப்படை உரிமை மீறலாகும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்கள் மீண்டுமொரு போரை விரும்பவில்லை. விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்வது அவர்களின் நோக்கம் அல்ல. அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை அமைதியாக நடத்தினால் நாம் அதற்கு இடமளிக்க வேண்டும்.

திலீபன் நினைவேந்தல் நிகழ்வால் இன மோதல் ஏற்படும் என்று தவறான கருத்தை சிங்கள மக்கள் மத்தியில் எவரும் பரப்பக்கூடாது. கடந்த நல்லாட்சிக் காலத்தில் வடக்கு – கிழக்கு மக்கள் அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தினார்கள்.

தற்போதைய ஆட்சியிலும் அவ்வாறான நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் நடத்தத் தடை போட முடியாது. ஆனால், இவ்வாறான நிகழ்வுகள் மூலம் தமிழ் அரசியல்வாதிகள் சுயலாபம் தேட முற்படக்கூடாது.

சிங்கள மக்களை வெறுப்பேற்றும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது. மூவின அரசியல்வாதிகளும் மூவின மக்களின் உறவுப் பாலமாகத் திகழ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...