தமிழ்நாட்டில் தக் லைஃப் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

25 6845073a8a606

தக் லைஃப் படம் கடந்த ஜூன் 5ம் தேதி வெளிவந்தது. மணி ரத்னம் – கமல் ஹாசன் – ஏ.ஆர். ரஹ்மான் என பிரம்மாண்ட கூட்டணியில் உருவான இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள்.

ஆனால், இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. விமர்சன ரீதியாக இப்படம் பின்னடைவை சந்தித்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

முதல் நாள் இப்படத்திற்கு உலகளவிலும், தமிழகத்திலும் நல்ல வரவேற்பு வசூல் ரீதியாக கிடைத்தது. ஆனால் அதற்கு அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைய துவங்கியுள்ளது.

இந்த நிலையில், மூன்று நாட்களை கடந்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மூன்று நாட்களில் ரூ. 26 கோடி வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் தமிழகத்தில் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version