முச்சக்கரவண்டி பேருந்துடன் மோதி விபத்து
இரத்தினபுரி – கிரியெல்ல பிரதான வீதியில் பேருந்தின் மீது முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தானது நேற்று (02.11.2023) கிரியெல்ல பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியின் சாரதி கவனக்குறைவால் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வண்டி பேருந்தின் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.