நாடு கடத்தப்பட்ட சந்தேக நபர்கள் 90 நாட்கள் தடுப்புக் காவலில்: குண்டுச் சம்பவங்களுடன் தொடர்பு குறித்து விசாரணை!

court

இலங்கையில் நடந்த குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டு, அண்மையில் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று சந்தேக நபர்களை 90 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதாகப் பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) இன்று (நவம்பர் 03) கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவினால் நாடு கடத்தப்பட்ட பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட, ஜீவராஜா சுஜீபன், இளங்கோ இசையழகன் மற்றும் யோகராஜா ஆகியோரே இவ்வாறு தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.

அண்மையில் வல்வெட்டித்துறைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள் தொடர்பிலும் இந்த மூன்று சந்தேக நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் எதிர்வரும் தவணையில் சமர்ப்பிக்குமாறு நீதவான் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Exit mobile version