1697454805 wall collapse school 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொரளையில் நிலைகுலைந்த பாடசாலைச் சுவர்! – 3 மாணவர்கள் படுகாயம்; ஒருவரது நிலை கவலைக்கிடம்! டோசர் சாரதி கைது!

Share

கொழும்பு, பொரளைப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பாதுகாப்புச் சுவர் இன்று திடீரென இடிந்து வீழ்ந்ததில் 16 வயதுடைய மூன்று மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான மண் தள்ளும் இயந்திரம் (Dozier) ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாடசாலையின் பாதுகாப்புச் சுவருடன் மோதியதே இந்த விபத்திற்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த வேளையில் பாடசாலைச் சுவருக்கு அருகில் நின்றிருந்த மாணவர்கள் மூவரும், இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர். உடனடியாக மீட்டெடுக்கப்பட்ட அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு மாணவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக மண் தள்ளும் இயந்திரத்தைச் செலுத்திய சாரதியை பொரளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இயந்திரத்தின் பிரேக் செயலிழந்ததா அல்லது சாரதியின் கவனக்குறைவா என்பது குறித்து தொழில்நுட்பப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாடசாலை நேரத்தில் இத்தகைய கனரக இயந்திரங்கள் பாடசாலைச் சுவர்களுக்கு அருகில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது குறித்துப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு மாநகர சபையும் இவ்விடயம் குறித்து உள்ளக விசாரணை ஒன்றிற்கு உத்தரவிட்டுள்ளது. காயமடைந்த மாணவர்களின் உடல்நிலை குறித்துத் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பொரளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். பாடசாலை வலயங்களுக்குள் கனரக வாகனங்களின் நடமாட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...