குழந்தைகளிடையே அதிகரித்துள்ள மூன்று நோய்களின் பாதிப்பு

5 21

குழந்தைகளிடையே தற்போது மூன்று நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா ஆகிய தொற்றுக்களே இவ்வாறு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த பண்டிகைக் காலத்தில் குழந்தைகள் அதிகமாகப் வெளியிடங்களுக்கு அழைத்துசெல்லப்பட்டமையே இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த வைரஸ் நோய்களில், குறிப்பாக இன்ஃப்ளூயன்ஸாவின் அதிகரிப்பு காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய மழைப்பொழிவு மற்றும் நுளம்புகளின் அதிகரிப்பு காரணமாக பல தொற்று நோய்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக, வயிற்றுப்போக்கு நோய்களின் அதிகரிப்பையும் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version