கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் படுகொலை
கிளிநொச்சியில் அதிர்வலையை ஏற்படுத்திய இளம் குடும்பஸ்தரின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூவரை கைது செய்துள்ளதாக வட்டக்கச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 25ம் திகதி இரவு கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட இராமநாதபுரம் பொலிஸார் பெண் உட்பட மூவரை நேற்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவரை தொலைபேசி மூலம் அழைத்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேகநபர்களை தேடி வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
Comments are closed.