ஜனநாயக ஆட்சிக்கு அச்சுறுத்தல்!!

thissa aththanayaka

பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுத்தல் என்பது ஜனநாயக ஆட்சிக்கு விரோதமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸஅத்தநாயக்க  எம்.பி. தெரிவித்தார்.

நுவரெலியா – வலப்பனை நாராங்தலாவ, மைலகஸ்தென்ன ஸ்ரீ தர்மராஜராமய விஹாரையின் விஹாராதிபதியை நேற்று (05) அவர் சந்தித்து ஆசி வாங்கிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது கருத்துகளை, நிலைப்பாடுகளை சுதந்திரமாக பாராமன்றத்துக்குள் வெளியிடும் உரிமை இருக்க வேண்டும்.

அந்த உரிமையை பயன்படுத்தி கருத்து வெளியிட்ட ஒருவரை தாக்க முற்படுவது, அவருக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்பன ஏற்புடைய விடயமாக அமையாது. அவற்றை கண்டிக்க வேண்டும்.

பாராளுமன்றத்துக்குள் கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற சம்பவங்களானவை ஜனநாயக ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக  அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version