‘திட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து கம்பளை நகரைப் பாதித்த கடும் வெள்ளம் காரணமாக, உயிர் மற்றும் சொத்துச் சேதங்களுக்கு மேலதிகமாக, நகரில் உள்ள கடைகள் மற்றும் களஞ்சியசாலைகளுக்குள் இருந்த பெருமளவான உணவுப் பொருட்களும் அழிவடைந்துள்ளன.
கம்பளை நகரில் உள்ள 2 சிறப்பங்காடி வளாகங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகள் வெள்ளத்தில் ஊறி, முற்றாக அழிவடைந்துள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது.
அரிசிக்கு மேலதிகமாக, பருப்பு, சீனி, மா (flour) முதலான அத்தியாவசிய உணவுப் பொருட்களும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.
கம்பளை – நாவலப்பிட்டி வீதியில் உள்ள கஹட்டபிட்டிய மற்றும் போதலாபிட்டிய ஆகிய பகுதிகளில் உள்ள களஞ்சியசாலைகள் மற்றும் சிறப்பங்காடி வளாகங்களே வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.