ஒருசாரார் என்னை அழிக்க நினைத்தார்கள். ஆனால் இளைஞர்,யுவதிகள் என்னை மீட்டு எடுத்தனர் இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதி ஒன்றுக்கு புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது உரையாற்றிய அவர் ,
வடக்கு கிழக்கில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களில் அதிகூடிய விருப்பு வாக்கு எனக்கே கிடைத்தது.
அதற்கு காரணம் இந்த மண்ணை நம்பி பணியாற்றியவன், கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் பற்றி பேசிய வரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் அதிகூடிய வாக்கினை அளித்து என்னை சிறையிலிருந்து மீட்டு எடுத்தனர்.
நாங்கள் தற்சமயம் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டு வருகின்றோம்.
தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒரு தனித்துவமான கட்சி. நமது கட்சி பொதுஜன பெரமுன உடன் கூட்டு வைத்துள்ளது.அந்த கட்சியின் உறுப்பினர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார்.
ஒரு இணக்கப்பாட்டுடன் நாங்கள் செயற்படுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா காரணமாக கடுமையான நெருக்கடிகள் மத்தியிலும் பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். என்றார்.
Leave a comment