சரிவடையும் நாட்டின் பொருளாதாரம்
எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் சரிவடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தற்போதையை பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படாது ஆனால் எதிர்வரும் மாதங்களில் பாரிய சரிவை எதிர்நோக்க நேரிடும்.
அரசாங்கம் உள்நாட்டு கடன் மறு சீரமைப்பு என்ற போர்வையில் இரகசிய வேலைகளை செய்துள்ளது.
இதனால் பிரச்சினை இல்லை என்ற போதிலும் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
Leave a comment