யாழில் கோவிலுக்கு சென்ற பெண் ஒருவரின் தங்க சங்கிலியை திருடர்கள் அறுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டையில் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் (16) பகல் 12 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்தவரென்றும் , அவர் சித்தங்கேணி சிவன் ஆலயத்திற்கு வந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது.
மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இனந்தெரியாத இரு இளைஞர்கள், பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியுள்ளனர்.
இதன்போது, சங்கிலியின் அரைவாசி திருடனின் கைகளிலும் மிகுதி அந்த பெண்மணி கைகளிலும் அகப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில், குறித்த பெண் முறைப்பாடொன்றை பதிவுச்செய்துள்ளார்.
முறைப்பாடு தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.