அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாபயவை கொலைசெய்து ஆட்சியைப் பிடிக்க முயன்றனர்!

Share
rtjy 21 scaled
Share

கோட்டாபயவை கொலைசெய்து ஆட்சியைப் பிடிக்க முயன்றனர்!

“இலங்கையில் இரண்டாவது மக்கள் போராட்டம் நிச்சயம் வெடிக்கும். இந்தப் போராட்டம் பயங்கரமானதாக இருக்கும். இதன் பின்னணியிலும் அமெரிக்காவே இருக்கும். என தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கோட்டா கோ ஹோம், ரணில் கம் பெக் என்பதே முதலாவது போராட்டத்தின் இலக்காக இருந்தது. இதில் “கோட்டா கோ ஹோம்” என்பது மட்டுமே வெளியில் தெரிந்தது.

“ரணில் கம் பெக்” என்பது திரைமறைவில் இடம்பெற்று வந்தது. 2ஆவது போராட்டம் “ரணில் கோ ஹோம்” என வராது. அது வேறு வடிவில் வரும்.

அதாவது, ரணில் ஆட்சியில் இருக்கும்போது வர்க்க வேறுபாட்டால் ஏற்படும் போராட்டமாக அது அமையும். பட்டினி, வேலையின்மை உள்ளிட்டவற்றால் மக்கள் வீதியில் இறங்கக்கூடும்.

மக்கள் உணவுகளைக் கொள்ளையடிக்கலாம், சுப்பர் மார்க்கெட்டிகள் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்படலாம். செல்வந்தர்களின் சொத்துகள் சூறையாடப்படலாம்.

உணவை எப்படிப் பதுக்குவது, அதன்மூலம் எப்படி போராட்டத்தை ஏற்படுத்துவதென்பது எல்லாம் சி.ஐ.ஏ. புத்தகத்தில் உள்ளது. விக்டோரியா நூலண்டால் (அமெரிக்க இராஜதந்திரி) இயக்கப்படும் போராட்டத்தின் 2ஆவது பாகமாகவே இது இருக்கும்.

முதலாவது போராட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கொலை செய்துவிட்டு லிபியாவில் போன்று, சர்வதேச தலையீட்டுடன் இடைக்கால ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது.

அது சரிவரவில்லை. அதனால்தான் தற்போது அடுத்த திட்டம் வருகின்றது. முதலாவது போராட்டத்தின்போது இருப்பவர்கள் வீதிக்கு வந்தனர். 2 ஆவது போராட்டத்தில் விவசாயிகள், வேலை இழந்தவர்கள் எனப் பலரும் வருவார்கள்.

முதலாவது போராட்டத்தின்போதும் சரத் பொன்சேகாவின் பங்களிப்பு இருந்தது. அவர் மட்டுமே போராட்டக் களத்துக்குச் செல்லக்கூடியதாக இருந்தது.

அமெரிக்கத் தூதுவருக்கும் பொன்சேகாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர் அமெரிக்காவின் கைப்பாவையாக மாறியுள்ளார்.

2010 ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவுக்கு வடக்கில் எப்படி 100 வீத வாக்குகள் கிடைக்கப்பெற்றன. லிபியாவில் இடைக்கால அரசு அமைந்தபோது இராணுவத் தளபதிகள் உள்வாங்கப்பட்டனர். இலங்கையில் அவ்வாறு நடந்திருந்தால் பொன்சேகாவும் இடைக்கால அரசியல் இருந்திருப்பார்.

2ஆவது போராட்டத்துக்கும் பொன்சேகா பயன்படுத்தப்படலாம். எதிர்வரும் நவம்பர் மாதமளவில் உணவு நெருக்கடி ஏற்படும். நீர் இல்லை. வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன.

இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் விழிப்பாக இருக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...