25
இலங்கைசெய்திகள்

நாட்டில் அனல் மின்னுற்பத்திக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

Share

சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் நீர், காற்று, சூரிய ஒளி என இயற்கை வளங்கள் இருந்தும் அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதி ஆகியிருக்கின்றது என உலக கனசதுர சங்க அமைப்பின் இலங்கைக்கான நிகழ்ச்சி இணைப்பாளர் அனுசியா ஜெயகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை இன்று (27) யாழ்ப்பாணத்தில்இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு அனுசியா ஜெயகாந்த் கருத்து தெரிவிக்கையில், “அனைத்தும் வரி குறைக்கப்படும் விலை குறையும் என்றார்கள் ஆட்சியாளர்கள்.

எதற்காக மீண்டும் மின்சார கட்டணத்துக்கு 18 வீதத்துக்கும் அதிக உயர்வு. இதில் என்ன நியாயம் இருக்கின்றது துறைசார் விற்பனரே இதற்கு சொல்லவேண்டும். இதேவேளை நாட்டில் ஆட்சி மாற்றம் மட்டுமே மாற்றமாக ஏற்பட்டுள்ளதே தவிர பொருளாதார நெருக்கடியோ வழங்கிய வாக்குறுதிகளோ நிறைவு செய்யப்படாது மக்கள் ஏமற்றப்பட்டதே மிச்சமாக உள்ளது.

இந்நிலையில், மக்களின் மீது மீண்டும் மின் கட்டண அதிகரிப்பு என்ற சுமை சுமத்தப்படுவதகாகவும் அது தொடர்பில் இங்கு ஆலோசனை செய்ய ஒன்றுகூடியுள்ளது நகைப்புக்குரியது.

நாட்டின் இயற்கை வளத்தால் நிறைவுசெய்யும் உற்பத்தி செய்யக்கூடிய ஏதுனிலை இருந்தும் உலக வங்கியின் நிகழ்ச்சி நிரலுக்காக குறைக்க வேண்டிய மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்காக ஆராய்கின்றோம். என்பதே உண்மை நிலைமையாக உள்ளது. வலுவான பொறிமுறைகள் இன்றி தள்ளாடும் இலங்கையின் திட்டமிடல்களுள் இது நிர்ப்பந்த உயர்வாகவே அமைகின்றது. ஆனாலும் இந்த கட்டண உயர்வை ஏற்க முடியாது.

இது மக்களை மேலும் வறியவர்களாக்குவதுடன் சிறுதொழில் முயற்சியாளர் மட்டுமல்லாது விவசாயிகள் பெரும் நிறுவனங்களும் செயலிழக்கும் நிலையை உருவாக்கும் என்பதே உண்மை இலங்கையில் தற்போது சூரிய மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி, நீர் மின் உற்பத்தி என இயற்கை வடிவில் குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் ஏதுனிலை இருக்கும் போது ஏன் அனல் மின் உற்பத்திக்கு ஊக்குவிப்பும் அதில் தங்கி இருக்கும் நிலையிலும் எமது நாடு இருக்கின்றது. இதை ஏன் வல்லுனர்கள் சிந்திப்பதாக இல்லை.

இதற்கு தீர்வு காணப்படுதல் அவசியம். ஆட்சியில் தற்போது இருக்கும் அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் கூறியது. கடந்த அரசாங்கங்கள் ஊழல் மோசடி செய்ததாக. ஆனால் இன்று ஆட்சிக்கு வந்த அவர்களால் ஏன் கட்டணங்களை குறைக்க முடியாதுள்ளது.

அல்லது சர்வதேச நாணய நிதியத்துக்கு அரசாங்கம் பணிந்து விட்டதா? அல்லது இவர்களும் ஊழல் செய்கின்றார்களா? அல்லது கடந்த ஆட்சியாளர் மேல் இவர்கள் பொய் குற்றம் சுமத்தி உண்மையை மறைத்து மக்களை ஏமாற்றினார்களா? என்ற சந்தேகம் மக்களிடம் எழுகின்றது. இதேவேளை மின்சாரம் என்பது மக்களின் அடிப்படை தேவைகளுள் ஒன்று.

மக்களின் இந்த அடிப்படை தேவையை வைத்து அரசியல் செய்வது நல்லதாகாது. இதேவேளை ஏற்கனவே கட்டண உயர்வுக்கன முடிவை எடுத்துவிட்டு கண்துடைப்புக்காக இப்போது கருத்துக் கேட்பதும் ஊழல் தான். இதற்கும் மக்களின் வரியே அரச நிதியாக செலவாகின்றது அத்துடன் வறிய மக்களை உழைப்பை மேலும் சுரண்டும் செயலாகவும் இது அமையும் இது ஒருபுறம் இருக்க தற்போது எங்கு பார்த்தாலும் சூரிய மின் உற்பத்திக்கான கட்டமைப்புக்கள் முளைக்கின்றன.

ஆனால் அந்த மின்சாரத்தை பிரதான கட்டமைப்பில் இணைப்பதில் மின்சார சபை செய்யும் குளறுபடியும் ஆயிரம் அரசியலும் நடக்கின்றது. சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுமுழுதும் இயற்கை வளங்கள் இருதும் அதைப் பயன்படுத்தாது அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதியாய் இருப்பது வெட்கக்கேடாகும். அந்தவகையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு எடுக்கும்.

இந்த கருத்துக் கேட்கும் முயற்சியில் மின்கட்டணம் அதிகரிக்க கூடாது, மக்களை மீண்டும் வறுமைக்கு உள்ளாக்க கூடாது என்பதை எனது பதிவாக முன்வைப்பதுடன் சூரிய மின் உற்பதி, காற்றாலை மின் உற்பத்தி, நீர் மின் உற்பத்தி ஆகிவவற்றை மேம்படுத்த சிறந்த பொறிமுறை வகுக்கப்பட்டு அனல்மின் மாபியாவின் படியிலிருந்து நாட்டை மீட்பது அவசியம் என்றும் வலியுறுத்துகின்றேன்” என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...