இலங்கைசெய்திகள்

வரிக்குறைப்பு தொடர்பில் பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

Share
7 26
Share

வரிக்குறைப்பு தொடர்பில் பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் இந்த ஆண்டு வரிகளைக் குறைப்பதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க (Chathuranga Abeysinghe) தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) எட்டப்பட்ட ஒப்பந்தங்களின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1% வரிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “குறிப்பாக, மறைமுக வரிகளைக் குறைப்பது காலப்போக்கில் செய்யப்பட வேண்டும். ஏனென்றால் இந்த வருடத்திற்குள் வரி குறைப்பை எதிர்பார்க்க முடியாது.

சர்வதேச நாணய நிதியத்தின்படி,15.1 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு வரியை நாம் வசூலிக்க வேண்டும்.

ஆனால் இந்த செயல்முறையிலிருந்து நாம் மீண்டு, வருவாய் வசூலின் செயல்திறன் அதிகரிக்கும் போது, ​​அந்த மானியங்களை அந்தத் தொழில்களின் தயாரிப்புகளுக்குத் திருப்பித் தரும் சாத்தியம் உள்ளது.

அதற்கு அப்பால் சென்றால், விசேடமாக வங்கித் துறை மற்றும் தொழில்களின் தொழிநுட்ப முதலீடுகளுக்கு வரிச் சலுகைகளை வழங்க புதிய அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது.

எனவே 17 ஆம் திகதி வரவுசெலவுத் திட்டத்தில் இதையெல்லாம் நாம் காணலாம். வரவுசெலவுத் திட்ம் ஊடாக, குறிப்பாக தொழில்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் ஆதரவை வழங்க அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் தொழில்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

கைத்தொழில்களுக்கான பொருட்களை இறக்குமதி செய்யும் போது புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சதுரங்க அபேசிங்க மேலும் தெரிவித்தார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...