24 6618a91bcd42a
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் வித்தியாசம் இல்லை: நாமல் பகிரங்கம்

Share

விடுதலைப் புலிகளுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் வித்தியாசம் இல்லை: நாமல் பகிரங்கம்

மக்கள் நம்பிக்கையை வெற்றி கொண்ட ஒருவரே பொதுஜன பெரமுனுவின் அதிபர் வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகள் என்ற ரீதியில் பொதுஜன பெரமுன சார்பில் பொருத்தமான ஒருவரை நாம் தெரிவு செய்வோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கண்டியில் நேற்று (11) ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் தேசிய மக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசம் கிடையாது.

கட்சியை மறுசீரமைத்து தேர்தலில் பொதுஜன பெரமுனவை வெற்றியடையச் செய்வதே எமது எதிர்பார்ப்பாகும்.

நாட்டின் இறைமை, கலாசாரம் நாட்டு மக்களை பாதுகாக்கும் வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கி செல்வோம்.

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களே நாட்டிற்கு தற்போது தேவைப்படுகின்றது.

கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் எனக்கு பாரிய பொறுப்பு உள்ளது.

எனவே கட்சியை கட்டியெழுப்பவுதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினையே முன்னெடுத்துள்ளேன்” எனக் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...