வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை – ஓடக்கரை வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று மதியம் (01) நகையும் பணமும் திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி பனை தென்னை அபிவிருத்தி சங்கத்தில் கடமையாற்றி வருகின்ற நிலையில் இன்று அவர் கடமைக்கு சென்றிருந்தார்.
அவரது மனைவி, மகளை பாடசாலையில் இருந்து தனது தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டு இன்று பி.ப 4 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதன்போது வீட்டின் கண்ணாடி உடைக்கப்பட்டு ஒரு பவுண் நகையும் பத்தாயிரம் ரூபா பணமும் களவாடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
அதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸார் திருடனை பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
.
Leave a comment