இளைஞன் ஒருவரின் விபரீத முடிவினால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சிவநகர் பகுதியில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிவநகர் புதுக்குடியிருப்பினை சேர்ந்த ஜெயசீலன் கிருஸ்ணகரன் (20) என்ற இளைஞனே இவ்வாறு விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் இளைஞர்கள் யுவதிகள் தவறான முடிவெடுக்கும் சம்பவம் இடம்பெறுவதாகவும் இளைஞர்கள் சரியான புரிதல்களுடன், செயற்படவேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
Leave a comment