மீண்டெழுந்து விட்டது ஐ.தே.க.! – இனித்தான் அரசியல் ஆட்டம்

24 663ab2674ade7

மீண்டெழுந்து விட்டது ஐ.தே.க.! – இனித்தான் அரசியல் ஆட்டம்

ஐக்கிய தேசியக் கட்சி மீண்டெழுந்துவிட்டது. அக்கட்சியின் பலம் என்னவென்பது அடுத்த தேர்தலில் தெரியவரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார(Palitha Range Bandara) தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர். மே தினத்தில் அவர்கள் மேடையேறுவார்கள் என நாம் கூறவில்லை.

அடுத்துவரும் நாட்களில்தான் அவர்கள் வருவார்கள். இனித்தான் அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கும். விழுந்துவிட்டது எனக் கூறப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி எழுந்துவிட்டது. எமது பலம் என்னவென்பது அடுத்துவரும் நாட்களிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் தெரியவரும்.

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலுக்கு வருவார் என நம்பவில்லை. ஐ.தே.கவில் தலைமைத்துவப் பிரச்சினை ஏற்பட்டபோதுகூட கரு ஜயசூரியவைப் பலிகடாவாக்கிவிட்டு சஜித் பிரேமதாஸ தப்பித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version