உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த சிறுவனொருவன் மீது, மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம், ஹொரவப்பொத்தான மோரவௌ பிரதேசத்திலுள்ள வயற் காணியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த சிறுவனொருவன் மீது, மரம் முறிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹொரவப்பொத்தான துடுவட்ட மஹா வித்தியாலயத்தில், தரம் 9இல் கல்வி கற்றுவந்த சேனகே சம்பிக்க சுந்தர சேன என்பவரே இவ்வாறு மரணமடைந்தார்.
மேற்படி சிறுவன் தனது உறவினர் ஒருவருடன் குறித்த பகுதிக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உழவு இயந்திரத்தில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, சிறுவனின் உறவினர், குறித்த மரத்துக்கு அருகில் உழவு இயந்திரத்தைத் தரித்து நிறுத்தியுள்ளார்.
இதன்போது மரம் முறிந்து சிறுவனின் தலையில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.