download 8 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மேல்நீதிமன்றம் இடைக்கால கட்டளை விதித்துள்ளது!

Share

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வடமாகாண ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் இடைக்கால கட்டளை விதித்துள்ளது.

இன்று யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவையிட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் யாழ் மாநகர சபையினை நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேற பணித்ததுடன் அதனை புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு எதிராக யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன் தாக்கல் செய்த வழக்கில் யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் ஆஜராகியிருந்தபோதே யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் இந்த இடைக்காலக் கட்டளையை பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு ஏப்ரல் 26ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...