பொலிஸாரிடம் சிக்கிய 83 சந்தேகநபர்கள்!

tamilni 314

பொலிஸாரிடம் சிக்கிய 83 சந்தேகநபர்கள்!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பொலிஸாரின் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் விசேட பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களை ஒழிப்பதற்கான விசேட நடவடிக்கையை பொலிஸார் நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 45 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version