maxresdefault 29 683c5da9b6598
இலங்கைசெய்திகள்

யூடியூபை அதிரவைக்கும் “விண்வெளி நாயகா..” பாடல்..! வெறித்தனமான அப்டேட்.!

Share

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த கனவு கூட்டணி ஒன்று 36 வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்திருக்கின்றது. அதுவேறு யாரும் இல்லை, உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் தான். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள ‘தக் லைஃப்’ (Thug Life) திரைப்படம் தற்போது இசை வெளியீடுகளுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெற்றுவருகின்றது.

ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம், மிகுந்த பட்ஜெட் மற்றும் பல மொழிகளில் ரிலீஸ் என இந்திய திரையுலகத்தில் பேசப்படும் மிக முக்கியமான படமாக மாறியுள்ளது.

இந்தப் படத்தில் கமல்ஹாசன் தவிர, சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முதலாவது பாடலாக வெளியான ‘ஜிங்குச்சா’, இசை ரசிகர்கள் மத்தியில் மெகா ஹிட் ஆனது. ஏ.ஆர். ரகுமானின் நவீன இசையில் வெளியான இந்தப் பாடலை யூடியூபில் பல கோடி பார்வையாளர்கள் பார்த்தனர்.

‘தக் லைப்’ படத்தின் இரண்டாவது பாடலாக வெளிவந்த ‘சுகர் பேபி’ பாடல், ‘ஜிங்குச்சா’-வுடன் ஒப்பிடும் போது மென்மையான காதல் கலந்த பாடலாக அமைந்திருந்தது. இப்போது மூன்றாவது பாடலான ‘விண்வெளி நாயகா’ என்ற பாடல், இசையின் அழுத்தத்தாலும், குரல்களின் தனித்துவத்தாலும் ரசிகர்களை மறுபடியும் கவர்ந்துள்ளது. இப்பாடல் வெளியான சில மணிநேரங்களிலேயே அதிகளவான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...