பேருந்து பற்றாக்குறை தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் அறிவிப்பு

15 19

பேருந்து பற்றாக்குறை தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களினால், வழமையான போக்குவரத்திற்கு இதுவரை எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் பேருந்துகள் பற்றாக்குறை தொடர்பில் பொதுமக்களிடமிருந்து எவ்வித முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் நிறைவடையும் வரை பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் பேருந்துகள் வழங்கப்படும் என அந்த சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புறங்களில் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தேர்தல் கூட்டங்களுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

 

Exit mobile version