ரவி கருணாநாயக்கவின் யோசனைக்கு ஆளும் தரப்பு இணக்கம்

4 13

ரவி கருணாநாயக்கவின் யோசனைக்கு ஆளும் தரப்பு இணக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கு எதிர்க்கட்சி தரப்பு முன்வைத்த சமர்ப்பித்த யோசனைக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய இணக்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கு அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடன்படுவதாக பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான தனிநபர் முன்மொழிவை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்ததைத் தொடர்ந்து குறித்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

“நாங்கள் 2001 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற சலுகைகளைக் குறைப்பது மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவது பற்றிப் பேசி வருகிறோம்.

எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் இன்று நாடாளுமன்றத்தில் அந்த முன்மொழிவை சமர்ப்பித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நாங்கள் அனைவரும் இந்த முன்மொழிவுடன் எங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்துகிறோம். ஆனால் நான் வருந்துகிறேன்.

ஒரு திட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டாலும், சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்தக் கலாச்சாரத்தை மாற்ற ஒப்புக்கொள்வதில்லை.

அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாகப் பேசுவதற்குப் பதிலாக வேறு தலைப்புகளைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் இன்னும் சலுகைகளைக் குறைக்கத் தயாராக இல்லை.” என்றார்.

Exit mobile version