5 59
இலங்கைசெய்திகள்

வெதுப்பக உற்பத்திகளின் விலை : நுகர்வோர் குற்றச் சாட்டு

Share

வெதுப்பக உற்பத்திகளின் விலை : நுகர்வோர் குற்றச் சாட்டு

சந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ள போதிலும் முட்டை சார்ந்த வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த காலங்களில் முட்டையின் விலை அதிகரித்திருந்தமை முக்கிய பேசுபொருளாக காணப்பட்டது. இதன்படி, கடந்த காலங்களில் சந்தையில் முட்டை ஒன்று 60 முதல் 70 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் தற்போது சந்தையில் முட்டை ஒன்று 25 முதல் 30 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இதுவரையில் முட்டை சார்ந்த வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைவடையவில்லை என நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் முட்டையின் விலை குறைவடைந்ததன் ஊடாக மாத்திரம் வெதுப்பக உற்பத்திகளின் விலையைக் குறைக்க முடியாது என இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைக்கப்பட வேண்டுமாயின் கோதுமை மா மற்றும் வெண்ணெய் என்பவற்றின் விலையும் குறைவடைய வேண்டும் எனவும் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்த்க்கது.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...