இலங்கைசெய்திகள்

அலெக்சின் மரணம்! ஐரோப்பா வாழ் மக்கள் எச்சரிக்கை

rtjy 206 scaled
Share

அலெக்சின் மரணம்! ஐரோப்பா வாழ் மக்கள் எச்சரிக்கை

அலெக்சின் மரணத்திற்கு காரணமாக இருந்த பொலிஸாருக்கு உடனடியாக உரிய தண்டனை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்காது போனால் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இவ்விடயத்தை உடனடியாக அறியப்படுத்தி, மேலதிக நடடிவக்கைகளை துரிதப்படுத்தி கொலையாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என ஐரோப்பா வாழ் சித்தங்கேணி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த இளைஞனின் மரணம் குறித்தான கண்ணீர் அஞ்சலி மற்றும் கண்டன அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சித்தங்கேணியை சேர்ந்த அமரர் நாகராசா அலெக்ஸின் பிரிவால் மீளாத் துயரில் உறைந்திருக்கும் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றோம்.

பொலிஸாரின் சித்திரவதையால் பலியான எங்கள் உயிர் தோழன் அலெக்சின் தீர்ப்பு என்ன? கொலை செய்த பொலிஸாரின் இடமாற்றம் இவனின் உயிருக்கு ஈடாகுமா?

சிறுநீரகம் செயலிழக்கும் நிலை வரும் வரைக்கும் கொடூர தாக்குதலை, கண்மூடித்தமான சித்திரவதையை செய்த பொலிஸாரின் அநீதியை தட்டிக் கேட்க எவரும் இல்லையா?

கொலை செய்யப்பட்ட எங்கள் ஊரைச் சேர்ந்த அலெக்சின் உயிரை மீட்டு தரமுடியுமா? கண் மூடித்தனமாக சித்திரவதை செய்த பொலிசாருக்கு என்ன தண்டனை? கொலை உண்ட எங்கள் ஊரைச் சேர்த்த அலெக்சின் வாக்குமூலத்தை கேட்ட பின்னரும் எதற்காக இந்த மௌனம்? சட்டத்தை நிலை நாட்ட முடியாத இது என்ன நாடா? இல்லை சுடுகாடா?

அலெக்சின் மரணத்திற்கு காரணமான பொலிஸாரை உடனடியாக சட்டதின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்காத காரணம் தான் என்ன?

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இவ்விடயம் தெரியாமல் போனதா? இந்த கொடூரமான சம்பவத்திற்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லையா? உடனடியாக அவருக்கும் தண்டனை கொடுக்க ஏன் தாமதம்? உண்மையான களவாளிகளை கண்டுபிடித்து எங்கள் அலெக்ஸ் நிரபராதி எனும் உண்மையினை அனைவருக்கும் அறியத்தர வேண்டும்.

மேலும் அலெக்சின் மரணத்திற்கு காரணமாக இருந்த பொலிஸாருக்கு உடனடியாக உரிய தண்டனை கொடுக்க வேண்டும்.

அவ்வாறு கொடுக்காது போனால் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இவ்விடயத்தை உடனடியாக அறியப்படுத்தி, மேலதிக நடடிவக்கைகளை துரிதப்படுத்தி கொலையாளிகளுக்கு எதிராக உரிய நடடிவக்கைகளை எடுப்போம் என்பதை உறுதியுடன் அறியத்தருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...