நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து பெருமளவு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் வேதாரண்யேஸ்வரா வித்தியாலயம், யாக்கரு வித்தியாலயம் மற்றும் விக்கினேஸ்வரா வீதியில் உள்ள மாதா ஆலயம் மற்றும் கணவாய் பகுதியில் உள்ள வீடு ஆகியவற்றில் கடந்த ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தது.
இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காங்கேசந்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் வெள்ளிக்கிழமை (04) கரணவாய் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
அவரது வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு பொருட்களையும், விற்பனை செய்யப்பட்ட நிலையில் தொலைபேசி தங்க நகை என்பன மீட்க்கப்பட்டிருந்தன.
மேலும் அவரது உடைமையில் வாள் ஒன்றும் மீட்கப்பட்டதாக தெரிவித்த குற்றத்தடுப்பு பிரிவினர், பிரதான சந்தேகநபர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தனர்.
#SrilankaNews
Leave a comment