லக்‌ஷ்மன் கிரியெல்ல
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிரான பிரேரணை நிறைவேறியே தீரும்! – சஜித் அணி நம்பிக்கை

Share

“கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிச்சயம் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல நம்பிக்கை வெளியிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும், தற்போதைய அரசு வீடு செல்ல வேண்டும் என்பதே நாட்டு மக்களின் நிலைப்பாடாகும்.

எனவே, மக்களின் கோரிக்கைக்குச் செவிமடுக்காமல், எவராவது இப்பிரேரணையை எதிர்த்து வாக்களித்தால் அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள்” – என்றார்.

அதேவேளை, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கபடும் என ஆளுங்கட்சி தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...