பிரதான நீர்த்தேக்கப் பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்ததன் காரணமாக பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 67 வீதத்தால் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கே.டி.என். சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அதிக மழையுடன், நீர்மட்டம் நேற்றைய தினம் (9) 66 வீதமாக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
அதன்படி, தெதுரு ஓயா மற்றும் ராஜாங்கனை ஆகிய இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே மாதம் முதல் வார இறுதிக்குள் பயிர்ச்செய்கையை தொடங்குமாறு பணிப்பாளர் நாயகம் விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.
#Srilankanews