விடுதலைப் புலிகளின் தலைவரது பெயரை உச்சரிக்க அருகதையற்ற இனவாதிகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற இனவாதிகளுக்கு எந்த அருகதையும் கிடையாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய உரிமைக்காகப் போராடிய எங்களின் தேசியத் தலைவர் பிரபாகரனின் நியாயமான நிலைப்பாடுளை நாங்கள் சுட்டிக்காட்டுவதற்கு தயங்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் துதிபாடுவோரை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சிங்களக் கடும்போக்குவாத நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் இதற்கு பதிலளித்த கஜேந்திரன் எம்.பி மேலும் குறிப்பிடுகையில்,
சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் மிகக் கீழ்த்தனமான சிங்கள – பௌத்த இனவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றவர்கள். இங்கு ஏனைய இனத்தவர்கள் மதத்தவர்கள் வாழ்வதற்கு அவர்களுக்கு உடன்பாடில்லை. குறிப்பாகத் தமிழர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோள்.
தங்களைப் போன்ற இனவெறியர்களின் செயற்பாடுகளாலேயே தமிழர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள் என்ற உண்மையை இன்று பெரும்பான்மையினத்தவர்களின் தரப்பில் இருந்தே சொல்லப்படுவதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
தமிழ்த் தரப்பில் இருந்து உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளி அல்லது கொலை செய்து கதையை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த மூன்று இனவாதிகளும் இருக்கின்றார்கள் என்பதை அவர்களின் கருத்து வெளிப்படுத்துகின்றது.
இவர்களின் அச்சுறுத்தல்களுக்குத் தமிழ்ச் சமூகம் அடிபணியப்போவதில்லை. எங்களுடைய உரிமைக்காகப் போராடிய எங்களின் தேசியத் தலைவர் பிரபாகரனின் நியாயமான நிலைப்பாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டுவதற்கு ஒருபோதும் தயங்கப்போவதில்லை என தெரிவித்தார்.
- breaking news sri lanka
- cricket sri lanka
- english news
- local news of sri lanka
- news from sri lanka
- news in sri lanka today
- sirasa news
- sri lanka
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news live
- sri lanka news tamil
- sri lanka news tamil today
- sri lanka news today
- sri lanka news today tamil
- Sri lanka politics
- sri lanka sports
- sri lanka tamil news today
- sri lanka trending
- sri lanka updates today
- sri lankan news
- Srilanka Tamil News
- tv news