நாட்டின் பிரதான நகரங்களில் அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து இன்றும் நாளையும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.
குறித்த ஆர்ப்பாட்டத்தை பிரதான நகரங்களில் மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றையதினம் அனுராதபுரம், தம்புள்ளை, நீர்கொழும்பு, மொனராகலை, கேகாலை, கிரிபத்கொடை, இரத்தினபுரி மற்றும் மகரகம ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்தோடு நாளையதினம் குருநாகல், பாணதுறை, திருகோணமலை, பதுளை மற்றும் நாட்டின் மேலும் சில நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
#SriLankaNews