மாலினியை அவமதித்த அரசாங்கம்..! ஆளும் தரப்பின் இரட்டை நிலைப்பாடு

26 13

மறைந்த நடிகை மாலினி பொன்சேகா, உயிருடன் இருக்கும் போது அவரை அவமதித்து விட்டு இறந்தவுடன் அவருக்கு மரியாதை செலுத்துவது அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை இன்று(27.05.2025) சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாலினி பொன்சேகாவின் மருத்துவ செலவுகளுக்காக ஜனாதிபதி நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு நிதி வழங்கப்பட்டதாக அரசாங்கத்தின் தலைமை கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ, சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறிருக்க, மாலினி பொன்சேகா உயிரிழந்தவுடன் அவருக்கு அரச மரியாதை செலுத்துவது என்பது அரசாங்கத்தின் உண்மைத்தன்மையை கேள்விக்குட்படுத்துவதாக முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அரச மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு அவர் மீது இழைக்கப்பட்ட அவமானங்களை மாற்றாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒரு உயர் பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரி, தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாத நிலையில், ஜனாதிபதி நிதியிலிருந்து உதவி கோரினால், அரசாங்கத்தால் அதனை நிராகரிக்க முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version