tamilni 9 scaled
இலங்கைசெய்திகள்

இந்தியாவுடன் இணங்க தயார்! டக்ளஸ் அறிவிப்பு

Share

இந்தியாவுடன் இணங்க தயார்! டக்ளஸ் அறிவிப்பு

இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் இணக்கப்பாட்டுடன் பேச்சுக்கள் நடத்தத் தயாராக உள்ளதாக தமிழ்நாட்டு மீன்வளத்துறை அமைச்சருக்கு இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று(28) வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட கடற்றொழிலாளர்கள் நன்னீர் மீன்பிடியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பிலான இரு நாட்டு அரசுகளதும் பேச்சுக்கள் முன்னேற்றம் ஏதும் இருக்கிறதா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நேற்று முன்தினம்(27) தமிழ்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் தொலைபேசியில் பேசியிருந்தார்.

இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்றார் அத்தோடு செவ்வாய் மாலை தாங்கள் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும் அவர் ஊடாக பாண்டிச்சேரி முதலமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும் எனக்கு கூறப்பட்டது.

அதேநேரத்தில், என்னையும் அந்தக் கலந்துரையாடலுக்கு நேரில் அல்லது தொலைபேசியில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு நான் அதற்கு இணங்கியுள்ளேன்.

எனக்கு அவர்கள் உத்தரவாதம் தரவேண்டும் அத்தோடு அவர்களின் இழுவை மடிப்படகுகள் எங்கள் கடலுக்குள் வந்து வளங்களை சுரண்டுகின்ற மற்றும் அழிக்கின்ற எங்கள் கடற்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவாதத்தினை தருவார்களாக இருந்தால் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு தயாராக இருக்கின்றேன் இதுதான் பேச்சுக்கான அடிப்படை” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...